Saturday, April 14, 2012

புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் இந்திய பிரஜைகள் மூவர் கடற்படையினரால் கைது!

Saturday, April, 14, 2012
இலங்கை::புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் இந்திய பிரஜைகள் மூவர் கடற்படையினரால் கைது:-

புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடித் திரிந்த இந்திய பிரஜைகள் மூவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இந்தியாவை சேந்தவர்கள் என்றும் இவர்களில் ஒருவரிடம் கடவுச்சீட்டு இருந்தமையால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

எனினும், மற்றைய இருவரிடமும் தகுந்த ஆதாரங்கள் இல்லாமையால் புங்குடுதீவு கடற்படையினர் அவர்களை ஊர்காவற்துறை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும், குறித்த நபர்கள் நேற்றைய தினம் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதியின் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் ஓமந்தைப் பகுதியில் இந்திய நிறுவனத்தின் "றெயில்வே" வேலைத்திட்டத்தின் கீழ்,பணியாளராக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக, காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment