Saturday, April, 14, 2012இலங்கை::மதுபோதையில் வாகனத்தை செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கை இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இதற்கமைய மதுபோதையில் வாகனம் செலுத்திய 90க்கும் அதிகமான சாரதிகள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் வேலைத்திட்டம் கடந்த 9ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுவருவதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் ஒரு வாரகாலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்...
2009ஆம் ஆண்டு தொடக்கம் 2012ஆம் ஆண்டுவரை தொடர்ச்சியாக திருட்டு சம்பவத்தில் ஈடுவட்டு வந்த கொள்ளை மன்னன் கைது!
வீட்டை உடைத்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரை கலாவத்த பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச் சந்தேக நபர் 2009ஆம் ஆண்டு தொடக்கம் 2012ஆம் ஆண்டுவரை தொடர்ச்சியாக திருட்டு சம்பவத்தில் ஈடுவட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கலாவத்த நகர், காக்கபள்ளி, முன்னேஸ்வரம், மையக்குளம் ஆகிய பிரதேசங்களில் இந்நபர் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
No comments:
Post a Comment