Monday, April 23, 2012ஹூஸ்டன்::அமெரிக்காவில் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த இந்தியப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டினில் கணவருடன் வசித்து வந்தவர் ஷ்ரியா பிமன் படேல், 27. இவருக்கு ஓராண்டுக்கு முன் தான் திருமணம் நடந்தது. கணவருக்கு எண்ணெய் தேய்த்து விடுவதாகக் கூறி குளியலறையில் அவரைப் பூட்டி பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த இவரது கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், கணவரே பெட்ரோல் ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக இவர் கூறினார். ஆனால், கணவர் குளியலறையில் இருந்து வெளியே வராதபடி கதவைத் தாழிட்டும், குளியலறையில் தண்ணீர் வராதபடி குழாயை அடைத்தும் வைத்திருக்கிறார் ஷ்ரியா. இதெல்லாம் அவர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து ஷ்ரியா கைது செய்யப்பட்டு ஆஸ்டினில் உள்ள டிரவிஸ் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment