Monday, April 23, 2012இலங்கை::இடம்பெயர் மக்களை மீள் குடியேற்ற அமெரிக்கா, இந்தியாவின் உதவியை நாடியது என விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
யுத்த வலயத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்களை மீள் குடியேற்ற வேண்டுமென இலங்கை அரசாங்த்திற்கு இந்தியா அழுத்தம் கொடுக்குமாறு, அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரன் கோரியுள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தினால் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட தகவலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 27ம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடம்பெயர் மக்களை மீள் குடியேற்றுவது மனிதாபிமான விடயம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா, ஹிலரியிடம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், 180 நாட்களுக்குள் மொத்த இடம்பெயர் மக்களையும் இலங்கை அரசாங்கத்தினால் மீள் குடியேற்ற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக பருவப்பெயர்ச்சி மழை மற்றும் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் பூர்த்தியாகமை போன்ற காரணிகளினால் இடம்பெயர் மக்களை மீள் குடியேற்றுவது உரிய காலத்திற்குள் முடியுமா என்பது சந்தேகமே என அவர் தெரிவித்துள்ளார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
(கொலம்போ ரெலிகிராப்)
No comments:
Post a Comment