Wednesday,April,18, 2012இலங்கை::புலிகள் இயக்கத்தை மேன்மைப்படுத்தும் நோக்கத்துக்காக இந்த இயக்கம் கடந்த காலங்களில் போர்முனையில் வெற்றி பெற்ற காட்சிகளையும் அதன் அங்கத்தவர்களுக்கு வழங்கப்பட்ட போர் பயிற்சிக் காட்சிகளையும் கொண்ட வீடியோ படத்தை காட்டிக்கொண்டிருந்த 4 பேரை சேருநுவரப் பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளனர்.
ஈச்சிலம்பத்தையில் முகத்துவாரத்தில் ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட திடீர் சோதனையின்;போது இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் அதே இடத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் முன்னாள் புலிகள் உறுப்பினர்கள் எனக் கூறப்படுகின்றது.
சந்தேக நபர்களுக்கு புலிகளுடன் இருந்த தொடர்புகளையிட்டும் இவர்களுக்கு இந்த வீடியோ இறுவெட்டு எப்படி கிடைத்தது என்பது பற்றியும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்
No comments:
Post a Comment