Saturday, April 14, 2012

நாட்டின் இறைமையை பாதுகாக்க படையினர் தொடர்ச்சியாக ஒத்துழைக்க வேண்டும் - ஜகத் ஜயசூரிய!

Saturday, April, 14, 2012
இலங்கை::நாட்டின் இறைமையை பாதுகாக்க படையினர் தொடர்ச்சியாக ஒத்துழைக்க வேண்டுமென இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாட்டின் நன்மதிப்பை சீர் குலைக்கும் முனைப்புக்களில் பல்வேறு தரப்பினர் முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

சர்வதேச சமூகத்தினால் நட்டின் இறைமைக்கு விடுக்கப்பட்டு வரும் சவால்களை முறியடிப்பதற்கு படையினர் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் சமாதானத்துடன் கூடிய அபிவிருத்தியை ஏற்படுத்துவதே அடுத்த சவால் எனவும் அதற்கும் படையினர் பூரணமான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகத்தினர் இலங்கைக்கு எதிராக மேற்கொண்ட பல சதி முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இராணுவத் தளபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment