Saturday, April, 14, 2012இலங்கை::யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களை கைவிடவில்லை என எம்.எஸ்.எப் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளநல ஆலோசனை வழங்கும் பணிகளை எம்.எஸ்.எப் தொண்டு நிறுவனம் மேற்கொண்டு வந்தது.
இந்த நிறுவனம் கடந்த 5ம் திகதி வடக்கிற்கான தமது சேவையை இடைநிறுத்திக் கொண்டது.
வடக்கில் யுத்தத்தினால் உள நிலை பாதிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உதவிகள் தேவைப்படவில்லை எனவும், நீண்ட கால அடிப்படையில் அவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் எம்.எஸ்.எப் தெரிவித்துள்ளது.
எனவே, நீண்ட கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலன்களை வழங்கும் இயலுமை தமது நிறுவனத்திற்கு கிடையாது என எம்.எஸ்.எப் அறிவித்துள்ளது.
இதன் காரணமாகவே இதுவரை காலமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வந்த உளநல ஆலோசனை சேவையை இடைநிறுத்தியதாகவும், இது யுத்த வலய பாதிக்கப்பட்ட மக்களை கைவிடுவதாக அர்த்தப்படாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
யுத்தம் முடிவடைந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் ஆயிரக் கணக்கான மக்கள் உள சார் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர் என்பதனை மறுப்பதற்கில்லை என எம்.எஸ்.எப் குறிப்பிட்டுள்ளது.
அவசரமாக உதவி தேவைப்படும் மற்றுமொரு பிரதேசத்திற்கு தமது வளங்களை பயன்படுத்த உத்தேசித்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment