Thursday, April, 26, 2012இலங்கை::கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மிலிந்த மொரகொட தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவி மற்றும் மாநகர சபை உறுப்பினர் ஆகிய அனைத்து பதவிகளிலிருந்தும் புதன்கிழமை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதம் ஜனாதிபதி செயலகத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சபையின் எதிர்க்கட்சித் தலைவருக்கான வெற்றிடத்தை நிரப்பும் பொருட்டு உறுப்பினர் மொஹமட் மஹ்ரூபின் பெயரை சிபாரிசு செய்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 10 பேர் அடங்கிய குழு கையளித்துவிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் எதிர்க்கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் மேற்படி சிபாரிசு கடிதத்தில் கையெழுத்திடவில்லை என்றும் கூறப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகிய மிலிந்த மொரடகொட தான் கொழும்பு மாநகர சபையின் பதவிகளில் இல்லாதபோதிலும் தனக்கு வாக்களித்த மக்களுக்கான சேவையை தொடர்ந்தும் முன்னெடுக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment