Sunday, April 01, 2012புதுடில்லி::புதுடில்லி விமான நிலையத்தில் வைத்து போலிக் கடவுச்சீட்டுடன் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாரிஸில் இருந்து வந்த இவரிடம் போலி இந்திய கடவுச்சீட்டு இருந்தமையால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதுடைய வீரா அஜி என்ற நபரின் கடவுச்சீட்டில் ஐவா குமார் சிவசங்கரன் என பெயரிட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸில் சட்டவிரோதமாகக் குடியேறியதாக்கூறி குறித்த நபர் நாடு கடத்தப்பட்ட நிலையில் AF-226 என்ற விமானத்தின் ஊடாக புதுடில்லி விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
6.12.2007 அன்று சென்னையில் இவருக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. எனினும் பின்னர் அது தொலைந்து போனதாக பொலிஸார் மூலம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவருக்கு 16.03.2012 என்ற திகதியிட்டு வந்துள்ள கடிதத்தில் அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment