Sunday, April 01, 2012ராமேசுவரம்::ராமேசுவரம் பகுதியில் இருந்து நேற்று காலை 500 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே நேற்று மாலை வலை விரித்து மீன்பிடிக்க முயன்றனர்.
அப்போது இலங்கை கடற்படையினர் 6 குட்டி ரோந்து கப்பல்களில் 30 பேர் அங்கு வந்தனர். அங்கு நின்ற ராமேசுவரம் மீனவர்களை பார்த்து இங்கு மீன்பிடிக்க வரக்கூடாது என்று எத்தனை முறை சொல்வது? மீண்டும், மீண்டும் ஏன் இங்கு வருகிறீர்கள் என்று கூறி விரட்டியடித்தனர்.
இதனால் பயந்து போன ராமேசுவரம் மீனவர்கள் வலைகளை எடுத்து கொண்டு அவசர அவசரமாக வேறு பகுதிக்கு சென்றனர். இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால் அவர்கள் மீன் பிடிக்காமல் தவித்தனர். பின்பு இரவு மீன் பிடித்து கொண்டு இன்று அதிகாலை அவர்கள் கரைக்கு திரும்பினர்.
நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் தங்களை விரட்டியடித்த சம்பவம் குறித்து மீன்வளத்துறை அதிகாரியிடம் புகார் கூறினர்.
No comments:
Post a Comment