Saturday, April, 21, 2012இலங்கை::இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாராளுமன்ற சர்வ கட்சிக் குழு இன்றைய தினம் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் இலங்கையில் இருந்து நாடு திரும்புவதற்கு முன்னர், இன்று காலை விஷேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளர்.
இந்திய எதிர்க்கட்சி தலைவி சுஷ்மா சுவ்ராஜ் உள்ளிட்ட குழுவினர் கடந்த 16ஆம் திகதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டனர்.
இவர்கள் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிற்கும் விஜயங்களை மேற்கொண்டு தமிழ் மக்களின் நிலை பற்றி கேட்டறிந்து கொண்டனர்.
வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் அவர்கள் திருப்தி வெளியிட்டனர்.
இந்தியக் குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்க் கட்சிகள், ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட முக்கிய சந்திப்புக்களை மேற்கொண்டனர்.
No comments:
Post a Comment