Sunday, April 15, 2012இலங்கை::யுத்த காலத்தில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பலருக்கு புதிய அடையாளங்கள் கிடைத்திருக்கலாம் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு அரசாங்கங்களின் உதவியுடன் இவ்வாறு காணாமல் போனோர் பட்டியலில் இருக்கும் பலர் வேறும் அடையாளங்களைப் பெற்றுக் கொண்டிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் அவுஸ்திரேலியாவிற்கு நாடு கடத்தப்பட்ட முன்னணி சோசலிச கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் பிரேம்குமார் குணரட்னம், இவ்வாறு தமது அடையாளங்களை மாற்றிக் கொண்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் பட்டியலில் இருக்கும் பலர் வெளிநாடுகளில் வேறு பெயர்களில் வாழ்ந்து வருவதாகவும் இவர்கள் பற்றிய தகவல்களை வழங்;குமாறு அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிடம் இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயிரக் கணக்கான இலங்கையர்கள் புதிய அடையாளங்களுடன் ஐரோப்பாவில் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பிரேம்குமார் குணரட்னம் துன்புறுத்தப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளின் முன்னிலையிலேயே விசாரணை நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment