Sunday, April 15, 2012இலங்கை::வெளிநாடுகளிலிருந்து இரகசியமாக இலங்கைக்குள் பிரவேசித்து இரகசியமான முறையில் அரசியலில் ஈடுபட அனுமதியளிக்கப்பட மாட்டாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் வந்து ஜே.வி.பி கிளர்ச்சிக்குழுவுடன் இணைந்து அரசியல் நடத்திய குமார் குணரட்னம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
குமார் குணரட்னம் இலங்கையில் அரசியல் செய்ய அனுமதித்திருந்தால் என்ன நேர்ந்திருக்கும் என தெரியாது. நாட்டுக்குள் பிரவேசிக்கும் நபர்கள் பற்றிய முழுமையான விசாரணை நடத்தப்படும்.
மேலும், குமார் குணரட்னத்தின் நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் விசாரணை நடத்துவார்கள். அவுஸ்திரேலிய பிரஜை என்ற காரணத்தினால் குமார் குணரட்னத்தை கைது செய்யாது நாடு கடத்தினோம் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment