Sunday, April 22, 2012

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரி அறப்போராட்டம்: ஸ்ரீராம சேனா மாநில தலைவர் பேட்டி!

Sunday, April, 22, 2012
சென்னை::ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரி விரைவில் அறப்போராட்டம் நடத்தப் படும் என்று ஸ்ரீராம சேனா, தமிழ்நாடு மாநில தலைவர் தென்காசி ரவிபாண்டியன் தெரிவித்தார். சென்னையில் அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி தமிழகம் வந்த போது, அவரை கொலை செய்ய பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டது. ஆனால் அந்த வழக்கில் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அவர்களை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தியை தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அணுமின் நிலையத்துக்கு எதிராக போராடிய உதயகுமாரை தேச விரோத சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் அறப்போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு தென்காசி ரவிபாண்டியன் கூறினார்.

No comments:

Post a Comment