Wednesday,April,18, 2012இலங்கை::நொச்சியாகம எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் பணம் கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் வேறு சில பிரதேசங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடனும் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவர்கள் கடந்த 6ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளொன்றில் வந்து எரிபொருள் நிரப்பு நிலையத்திலுள்ள ஊழியர்களை அச்சுறுத்தி சுமார் 76 ஆயிரம் ரூபாவைக் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
நொச்சியாக பொலிஸாரினால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபர்கள் அனுராதபுரம் மற்றும் கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment