Thursday, April 26, 2012

சென்னை மாநகராட்சி தேர்தலில் முறைகேடு புகார்:திமுக மனு தள்ளுபடி!

Thursday, April, 26, 2012
சென்னை::சென்னை மாநகராட்சி தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி,தி.மு.க உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.நடந்து முடிந்த சென்னை மாநகராட்சி தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் கூறி,தி.மு.க சட்டத்துறை செயலாளர் ஆ.எஸ்.பாரதி மற்றும் முன்னாள் மேயர் ம.சுப்ரமணியன் ஆகியோர் உட்பட 7 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மனுக்களை தள்ளுபடி செய்து இன்று தீர்ப்பு வழங்கியது.வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமரா இல்லை என்றும்,துணை ராணுவ பாதுகாப்பு இல்லாததால் வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.மனுக்களை விசாரித்த நீதிமன்றம்,தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்ட குற்றசாட்டு நிரூபிக்கபடவில்லை என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்தது.

No comments:

Post a Comment