Monday, April 23, 2012ராமநாதபுரம்::தமிழகத்திலிருந்து இலங்கைக்கு செம்மரக்கட்டை கடத்தப்படுவது, துப்பாக்கி தயாரிக்கப் பயன்படுத்துவதற்காக என்ற தகவல் கிடைத்ததை தொடர்ந்து, "கியூ' பிரிவு போலீசார் மேலும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் செம்மரக்கட்டைகள், ராமேஸ்வரம் வழியாக அடிக்கடி இலங்கைக்கு கடத்தப்படுகிறது. இலங்கையில் போர் முடிவுக்கு வந்தபின் திடீரென அதிகளவில், செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவது குறித்து, பல்வேறு சந்தேகங்கள் எழுந்தநிலையில், "கியூ' பிரிவு போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.
கிலோ ரூ.25 ஆயிரம் : தமிழகத்தில் கிலோ 800 முதல் 1500 ரூபாய் வரை வாங்கப்படும் செம்மரக்கட்டைகள், இலங்கையில் 25 ஆயிரம் ரூபாய் வரை விலைபோகிறது என்ற தகவல் கிடைத்தது. குறிப்பாக இலங்கையில் இவ்வகை மரங்களை அதிக விலை கொடுத்து வாங்கப்படுவதன் காரணம் குறித்து விசாரித்தனர்.
இதுகுறித்து "கியூ' பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: செம்மரக்கட்டைகள் எதையும் தாங்கும் வலிமை மிகுந்தது. வெடி குண்டால் கூட தகர்க்க முடியாது. நாங்கள் விசாரித்த வகையில், 50 சதவீதம் துப்பாக்கி தயாரிப்பதற்கு என்ற தகவலும் சிலர், வெளிநாட்டில் செம்மரக்கட்டை மூலம் மருந்து தயாரிக்கின்றனர் என்றும் தெரிவிக்கின்றனர். துப்பாக்கி தயாரிக்க எந்தவகையில் செம்மரக்கட்டை பயன்படும் என்பது குறித்து, சென்னை ஆவடி ஆயுதப்பயிற்சி மையத்தில், தகவல் சேகரிக்க உள்ளோம், என்றார்.
No comments:
Post a Comment