Thursday, April, 26, 2012இலங்கை::கிழக்கு மாகாணத்தின் பிரதான நகரப் பகுதிகள் சிலவற்றில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
தம்புள்ளை பகுதியில் உள்ள பள்ளிவாசல் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகின்றது.
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பல பகுதிகளில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹர்த்தால் காரணமாக குறித்த பகுதிகளில் கடைகள் மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இந்தப் பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment