Tuesday, April, 17, 2012இலங்கை::இந்திய அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டுள்ள புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான நூல் ஒன்றை வெளியிட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இடமளித்துள்ளதாகவும் அவர் இந்தியாவின் தடையை மீறி இந்த சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளதாகவும் திவயின தெரிவித்துள்ளது.
தமிழர்களின் போராட்டம் என்ற இந்த நூல் கடந்த வெள்ளிக்கிழமை சென்னை தியாகராஜா மண்டபத்தில் வெளியிடப்பட்டது. பிரபாகரனின் ஆலோசகர் காசி ஆனந்தன், வைகோ, நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணு, மணிராசன் ஆகிய புலிகளின் ஆதரவாளர்கள் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.
பிரபாகரனின் நெருங்கிய நண்பரான நெடுமாறன் நெறிப்படுத்தியிருந்த இந்த நூல் வெளியிட்டு விழாவில் உரையாற்றிய வைகோ, தமிழர்கள் ஆயுதம் ஏந்த இந்த நூல் வழிகாட்டும் என தெரிவித்திருந்தாகவும் திவயின கூறியுள்ளது.
No comments:
Post a Comment