Saturday, April 14, 2012

அமெரிக்கா அறிவிப்பு : ஆளில்லா விமான தாக்குதல் பாகிஸ்தானில் தொடரும்!

Saturday, April, 14, 2012
வாஷிங்டன்::தீவிரவாத தடுப்பு நடவடிக்கையாக ஆளில்லா விமானங்கள் டிரோன் மூலம் பாகிஸ்தானில் நடத்தப்படும் தாக்குதல் தொடரும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறினர். பாகிஸ்தானில் அமெரிக்காவின் சிறியரக ஆளில்லா விமானங்கள் திடீர் திடீரென தாக்குதல் நடத்தி வருகின்றன. அனுமதி இல்லாமல் அத்துமீறி அமெரிக்க விமானங்கள் நுழைவதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. டிரோன்கள் தாக்குதலில் தீவிரவாதிகள் மட்டுமன்றி பொதுமக்கள், ராணுவ வீரர்கள், போலீசார் பலியாகி வருகின்றனர். இதற்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. அத்துடன் நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தான் வீரர்கள் பலியாயினர். இதையடுத்து, டிரோன் தாக்குதலை நிறுத்த வேண்டும், வீரர்கள் பலியானதற்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாகிஸ்தன் பார்லிமென்டில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் பாகிஸ்தானின் ஒத்துழைப்பு கிடைக்க தொடர்ந்து பேச்சு நடத்துவோம். அதேநேரத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது உறுதியாக தெரிந்தால், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்துவோம் என்று கூறினர். இதனால் பாகிஸ்தான் அமெரிக்கா உறவில் சிக்கல் அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment