Monday, April, 09, 2012இலங்கை::முன்னிலை சோசலிஷக் கட்சியின் காணாமற்போயுள்ள செயற்பாட்டாளரான பிறேம் குமார் குணரத்னத்தை கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவுஸ்திரேலியாவின் ஏ.பீ.சீ செய்தி சேவை தெரிவித்துள்ளது.
நிவ் சவுத் வேல்ஸை வசிப்பிடமாகக் கொண்ட பிறேம்குமார் குணரத்னம் கடந்த வாரம் இலங்கையில் காணாமற் போனதை அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களம் உறுதிபடுத்தியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமது கணவர் அவுஸ்திரேலிய பிரஜை என பிரேம்குமார் குணரத்னத்தின் மனைவி சம்பா சோமரத்ன ஏ.பீ.சீ செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சின் செலாளர் கருணாதிலக்க அமுனுகமவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, பிறேம் குமார் குணரத்னத்தை கண்டிபிடிப்பதற்கு உதவுமாறு அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் இலங்கையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
இதற்கமைய குணரத்னம் தொடர்பாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்திடம் உள்ள தகவல்களை வழங்குமாறு கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
அவர் அவுஸ்திரேலிய பிரஜையா? என்பது தொடர்பாகவும் அவரது வதிவிடம் மற்றும் இலங்கைக்கு வருகைத் தந்த திகதி பற்றிய தகவல்களையும் கோரியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிடுகிறார்.
No comments:
Post a Comment