Sunday, April, 22, 2012இலங்கை::நாடு முழுவதிலும் தான் நாங்கள் படைகளை நிறுத்தியுள்ளோம்: வடக்கில் நிலைகொண்டுள்ள துருப்புகளை வெளியேற்ற முடியாது - ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச!:-
வடக்கில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றக் கோருவது நியாயமற்றது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியக் குழுவினரிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்களின் நிலை குறித்து ஆராய வந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு நேற்றுக்காலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது.
இதன்போது வடக்கில் இருந்து இராணுவம் வெளியேறுவதையே அங்குள்ள மக்கள் விரும்புவதாக இந்தியக் குழுவினர் எடுத்துக் கூறினர். அதற்கு அதிபர் மகிந்த ராஜபக்ச மறுப்புத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் தான் நாங்கள் படைகளை நிறுத்தியுள்ளோம். வடக்கில் நிலைகொண்டுள்ள துருப்புகளை வெளியேற்றுவது சாத்தியமாக இருக்கப் போவதில்லை.
அவர்களை அங்கிருந்து வெளியேற்றி இந்தியாவுக்கா அனுப்ப முடியும்? என்று இந்தியக் குழுவினரைப் பார்த்து ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார் ஜனாதிபதி.
குறிக்கப்பட்ட இடங்களில் தான் படையினர் தளம் அமைத்துள்ளனர். அவர்கள் ஒன்றும் வெளிநாட்டு மண்ணில் நிறுத்தப்படவில்லை. இலங்கையில் தான் நிலைகொண்டுள்ளனர்.
போர் முடிந்த பின்னர் வடக்கு, கிழக்கில் முன்னர் இராணுவத்தினர் வசம் இருந்த பெருமளவு பகுதிகளை விடுவித்துள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment