Monday, April 2, 2012

தி.நகர் கடைகளுக்கு சீல் வைத்த விவகாரம்: அரசு முடிவு எடுக்க 8 வாரம் அவகாசம் தேவை!

Monday, April 02, 2012
சென்னை::தி.நகரில் விதிமுறை மீறி கட்டப்பட்ட 31 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இதை அகற்ற கோரி சரவணா ஸ்டோர்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட கடைகளின் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து கட்டிட உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 6 வாரத்துக்கு கடை திறக்க அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம், வழக்கை உயர் நீதிமன்றமே மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. இந்த வழக்கை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் விசாரித்தனர். இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன் கமிட்டி அளித்த பரிந்துரை மீது முடிவெடுக்க தமிழக அரசு அவகாசம் கேட்டுள்ளது.

எனவே, இதில் முடிவு எடுக்க தமிழக அரசுக்கு 6 வாரம் அவகாசம் தருகிறோம். அதற்குள் அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும். அதுவரை தி.நகர் கட்டிடங்களுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உச்ச நீதிமன்றம் 6 வாரம் இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளது. வரும் 21ம் தேதியுடன் இந்த கெடு முடிகிறது. இதை மேலும் 8 வாரத்துக்கு நீட்டிக்கிறோம். எனவே, மேலும் 6 வாரம் சீல் வைக்கப்பட்ட கடைகள் திறந்திருக்க அனுமதி வழங்குகிறோம். வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஏப்ரல் 2ம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம். இவ்வாறு உத்தர வில் கூறப்பட்டுள்ளது. அதன்படி இந்த வழக்கு மீண்டும் 2ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதுபற்றி அரசு பளீடர் எஸ்.வெங்கடேசிடம் கருத்து கேட்ட போது, இந்த வழக்கில் அரசு கொள்கை முடிவு எடுக்க மேலும் 8 வாரம் அவகாசம் கேட்க உள்ளது. தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நடப்பதால் இதில் முடிவு எடுக்க 8 வாரம் அவகாசம் கேட்டு அரசு தரப்பில் புதிய மனு தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி உயர் நீதிமன்றத்தில் 2ம் தேதி தெரிவிப்போம் என்றார்.

No comments:

Post a Comment