



Wednesday,April,11,2012சென்னை::தமிழகத்தில் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் மீண்டும் மாலை 4.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. முன்னதாக, சென்னையில் இன்று மதியம் 2.05 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் சென்னையில் மாலை 5 மணியளவில் சுனாமி தாக்கலாம் என தகவல் தெரிவிக்கபட்டது. நிலநடுக்கத்தால் போது மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்தோனேசியாவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ( ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவானது.) சென்னையிலும் உணரப்பட்டது. சென்னையைப் பொறுத்த வரையில் மந்தைவெளி , மைலாப்பூர், சாந்தோம், ஆழ்வார்ப்பேட்டை மற்றும் எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது. சென்னை தா;லைமைச் செயலகத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் ஊழியர்கள் வெளியேறினர்.தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
No comments:
Post a Comment