Tuesday, April 17, 2012

கடந்த மார்ச் 15ல் இலங்கை மீனவர்கள் வெடிகுண்டு வீசியதில் தீப்பிடித்து கடலில் மூழ்கிய படகை மீட்க சென்றது குழு!

Tuesday, April, 17, 2012
ராமேஸ்வரம்::இலங்கை மீனவர்கள் வெடிகுண்டு வீசியதில் தீப்பிடித்து கடலில் மூழ்கிய படகை மீட்க ராமேஸ்வரத்தில் இருந்து குழு நேற்று சென்றது. ராமேஸ்வரம் அருகே கடந்த மார்ச் 15ல் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது இவர்களின் படகு மீது, அங்கு வந்த இலங்கை மீனவர்கள் வெடிகுண்டை வீசினர். இதில் படகு வெடித்து சிதறி கடலில் மூழ்கியது. அதிலிருந்த நான்கு மீனவர்கள் கடலில் குதித்தனர். வேறு படகில் ஏறி ராமேஸ்வரம் வந்தனர். படகு உரிமையாளர் ஆறுமுகம், மீன்பிடி சாதனங்கள் உட்பட ரூ.15 லட்சம் மதிப்பு படகு சேதம் குறித்தும், படகை மீட்க உதவுமாறு தமிழக முதல்வர், மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் மனு கொடுத்தார். அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து ஆறுமுகம் உட்பட 22 பேர் நான்கு படகுகளில், கடலில் மூழ்கிய படகை மீட்க ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று கிளம்பிச் சென்றனர்.

No comments:

Post a Comment