Monday, April 9, 2012

நெடுந்தீவு 13 சிறுமி படுகொலை; சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு!

Monday, April, 09, 2012
இலங்கை::யாழ்ப்பாணம் நெடுந்தீவில் 13 வயதான சிறுமி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை குறித்த வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரைத் எதிர்வரும் 17 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்வாகற்துறை நீதவான் நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டது.

கடந்த மாதம் 3 ஆம் திகதி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் நெடுந்தீவு எட்டாம் வட்டாரத்தைச் சேர்ந்த யேசுதாசன் லக்சினி என்ற குறித்த சிறுமியின் சடலம், நெடுந்தீவு ஒன்பதாம் வட்டாராப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.

குறித்த சிறுமி வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கல்லால் தாக்கி தலை சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டது.

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று வந்த யேசுதாசன் லக்சினி ஏழு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் நான்காவது பிள்ளையாவார்.

No comments:

Post a Comment