



இஸ்லாமாபாத்::பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் அருகே பயணிகள் விமானம் மோசமான வானிலை காரணமாக விபத்திற்குள்ளானது. பாகிஸ்தானின் போஜா ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் ஒன்று கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத்திற்கு சென்றது. அப்போது மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்திற்குள்ளானது.இந்த விபத்தில் 130 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
இந்த விமானத்தில் 130 பயணிகள் இருந்ததாகத் தெரிகிறது. வெள்ளிக் கிழமை பாகிஸ்தானின் தொலைக்காட்சி சேனல்கள் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன.
கராச்சியைச் சேர்ந்த போஜா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம், காராச்சியில் இருந்து இஸ்லாமாபாத் சென்று கொண்டிருந்தது. மாலை 5 மணி அளவில் புறப்பட்ட விமானம் 6.40க்கு இஸ்லாமாபாத்தில் தரை இறங்க வேண்டும். ஆனால், அதற்கு சற்று முன்னர், ராவல்பிண்டி அருகில் உள்ள சக்லாலா விமானதளத்தின் அருகே, மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் விபத்துக்கு உள்ளானது. இதில் குறைந்தது 130 பேர் இறந்திருக்கக் கூடும் என பாகிஸ்தான் அறிவித்தது. மோசமான வானிலையால் மீட்புப் பணிகள் சிறிது பாதிக்கப்பட்டன. தற்போது மீட்புப் பணிகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment