Tuesday, March 20, 2012

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்திருக்கும் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்னால் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்!

Tuesday, March 20, 2012
லண்டன்::ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்திருக்கும் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்னால் ஆயிரக்கணக்கான இலங்கை ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

பிரித்தானிய இலங்கை போரம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த அமைதியான பேரணியில் இலங்கையின் தேசியக் கொடியைத் தாங்கியவாறும், அமெரிக்காவுக்கு எதிரான பதாதைகளை ஏந்தியவாறும் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கையின் ஜனநாயகத்தில் அமெரிக்கா கையிடக்கூடாது, அமெரிக்கா இரட்டைவேடம் போடுகிறது போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக் காரர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இலங்கையின் உண்மையான நிலையை பிரித்தானிய பிரஜைகள் நாட்டுக்குச் சென்று பார்வையிடவேண்டு மென்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட வர்கள் வேண்டுகோள்விடுத்தனர்.

இலங்கையில் பாரியளவிலான அபி விருத்திப் பணிகள், மீள்கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. எல்.ரி.ரி.ஈ.யினரின் கொடிய பிடியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களை இலங்கை அரசாங்கம் காப்பாற்றி தற்போது அவர் களை சமதானச் சூழலில் குடியமர்த்தி யிருப்பதாகவும் ஆர்ப்பாட்டக் காரர்கள் தெரிவித்தனர்.

சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போலி பிரசாரங்களுக்கு செவிமடுத்து அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இலங்கையின் உள் விவகாரத்தில் தேவையின்றித் தலையிடுவதாக பிரித்தானிய இலங்கை போரம் அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment