Wednesday,March,21,2012புதுச்சேரி::இலங்கை விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் கருத்து திருப்தி அளிக்காததால், புதுச்சேரியில் இன்று அ.தி.மு.க. முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தது.
இதையொட்டி புதுச்சேரியில் முழு பந்த் துவங்கியது. இதில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. எனினும் அரசுப்பேருந்துகள் ஓடத்துவங்கின. இந்த பந்த்திற்கு கம்யூனிஸ்ட், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பந்தை முன்னிட்டு புதுச்சேரியில் நேருவீதி, காந்தி வீதி, பெரிய மார்க்கெட், அண்ணாசாலைகளில் கடைகள் திறக்கப்படாமல் வெறிச்சோடி கிடந்தன. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது
No comments:
Post a Comment