Wednesday, March 21, 2012

சங்கரன்கோவில்- பிரமாண்ட முன்னணியுடன் அதிமுக தொடர்ந்து முதலிடம்!

Wednesday,March,21,2012
சங்கரன்கோவில்::சங்கரன்கோவில் இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இரண்டாம் சுற்று முடிவின்படி, அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி 12,286 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தி.மு.க. வேட்பாளர் ஜவஹர் சூரியகுமார் 3,784 ஓட்டுகளும், ம.தி.மு.க. வேட்பாளர் சதன் திருமலைக்குமார் 2,758 ஓட்டுகளும், தே.மு.தி.க. வேட்பாளர் முத்துக்குமார் 1,946 ஓட்டுகளும் பெற்றுள்ளனர். தபால் ஓட்டுகள் இறுதியாக எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுகள் முன்னிலை : இரண்டாம் சுற்றின் முடிவில், அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி, இரண்டாமிடத்தில் உள்ள தி.மு.க. வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரை விட 8,502 ஓட்டுகள் முன்னிலையில் உள்ளார்.

சங்கரன்கோவில் (தனி) சட்டசபைத் தொகுதிக்கான இடைத்தேர்தல், கடந்த 18ம் தேதி நடந்தது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை, புளியங்குடியில் உள்ள ஸ்ரீ வீராசாமி செட்டியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இன்று நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. மொத்தம் 14 மேஜைகளில் 18 சுற்றுகளாக ஓட்டு எண்ணப்படுகிறது. 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஓட்டு எண்ணிக்கை முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது அனைத்து மேஜைகளிலும் ஓட்டுக்கள் எண்ணியதும், அதில் ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற ஓட்டுக்கள், மொத்த ஓட்டுக்களுடன் ஒத்துப் போகிறதா என்பது சரிபார்க்கப்பட்ட பின் தான், ஒவ்வொரு சுற்று முடிவுகளும் வெளியிடப்படும். எனவே, முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை விவரம் தெரிய, காலை 9 மணியாகிவிடும்.

இந்த தேர்தலில் மொத்தம் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 760 ஓட்டுகள் பதிவாகி இருந்தன...

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வெல்கிறது. அக்கட்சியின் வேட்பாளர் முத்துச்செல்வி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட அதிக அளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னணியில் உள்ளார். 3வது இடத்தில் மதிமுகவும், 4வது இடத்தில் தேமுதிகவும் உள்ளன.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது. இதில் அதிமுக, திமுக, தேமுதிக, மதிமுக, பாஜக வேட்பாளர்கள் உள்பட 13 பேர் போட்டியிட்டனர். அதிகபட்சமாக 78சதவீத வாக்குகள் பதிவாகின.

வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கும் எண்ணும் மையமான புளியங்குடியில் உள்ள வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டன. அந்த கல்லூரிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. அதில் 13 வாக்குகளை அதிமுகவும், மீதமுள்ள 3 வாக்குகளை மதிமுகவும் பெற்றன. திமுக, தேமுதிக வேட்பாளர்களுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை.

தொடர்ந்து அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி முதலிடத்தில் இருந்து வருகிறார். 2வது இடத்தில் திமுகவும், 3வது இடத்தில் மதிமுகவும், 4வது இடத்தில் தேமுதிகவும் உள்ளன.

குடை, லைட்டர்களுக்குத் தடை

வேட்பாளர்கள், அவர்களது ஏஜெண்டுகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ள புகைப்பட அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டது. அத்துடன் அவர்களிடம் ஏதாவது ஆயுதம் இருக்கிறதா என்றும் போலீசார் சோதனையிட்டனர்.

தேர்தல் அதிகாரியால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை வைத்திருக்கும் ஏஜெண்டுகள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்கள்.

வாக்கு எண்ணும் மையத்திற்குள், கூர்மையான பொருட்கள், பாட்டில், டின், டிபன் பாக்ஸ், குடை, தீப்பெட்டி, வயர், லைட்டர், திரவப் பொருட்கள், கெமிக்கல், உணவுப் பண்டங்கள் போன்ற எதையும் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அதேபோல வாக்கு எண்ணிக்கை ஏஜெண்டுகள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் ஆகியோர் செல்போன் எடுத்து வரவும் அனுமதிக்கப்படவில்லை.

தேர்தல் பார்வையாளர், தேர்தல் அதிகாரி, வேட்பாளர், அவரது ஏஜெண்டு ஆகியோர் பாதுகாப்பு வளையம் வரை செல்போன் எடுத்து வர அனுமதிக்கப்பட்டனர். வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் தேர்தல் பார்வையாளர் மட்டுமே செல்போன் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 14 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.

அதிமுக சார்பி்ல முத்துச்செல்வி, திமுக சார்பில் ஜவகர் சூரியக்குமார், மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார், தேமுதிக சார்பில் முத்துக்குமார் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

கடந்த தேர்தலில் இத்தொகுதியை அதிமுகவின் கருப்பசாமி வென்றார். அவரது மரணத்தைத் தொடர்ந்து இங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.

திராணி இருந்தால் சங்கரன்கோவிலில் வெல்லுங்கள் பார்ப்போம் என்று முதல்வர் ஜெயலலிதா, தேமுதிகவுக்கும், பிற கட்சிகளுக்கும் சவால் விட்டிருந்தார்.

No comments:

Post a Comment