Thursday, March 22, 2012ஜெனீவா::ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிராக மலேசியா வாக்களிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.நாவிற்கான மலேசியாவின் விசேட பிரதிநிதி பரம் குமாரசுவாமியே இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலையடுத்தே இம்முடிவை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மலேசிய ஊடகமொன்றிற்குக் கருத்துத் தெரிவித்துள்ள குமாரசுவாமி
ஜெனீவாவில் இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் அது குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை ஏற்படுத்தாது.
இது ஒரு வலுவற்ற பிரேரணை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment