Thursday, March 22, 2012

ஜெனிவாவுக்கான அமெரிக்க தூதுவர் ஐலின் டொனஹோ,தொடர்புக்கொண்டு, யோசனைக்கு இணங்குமாறு அழுத்தம்:தமரா குணநாயகம் நிராகரிப்பு!

Thursday, March 22, 2012
ஜெனிவா::அமெரிக்காவினால்,இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பேரவையில் கொண்டு வந்துள்ள யோசனை மீதான இறுதி விவாதம் மற்றும் வாக்கெடுப்பு என்பன இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதன் போது, கியூபா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் அமெரிக்கா மனித உரிமைகள் தொடர்பாக கடைபிடித்து வரும் இரண்டு விதமான கொள்கைகள் குறித்து கேள்வி எழுப்ப உள்ளதாக ஜெனிவாவில் உள்ள இலங்கை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை தொடர்ந்தும் இலங்கை நிலைப்பாடு பற்றி வெளிநாட்டு தூதுவர்களுக்கு தெளிவுப்படுத்தி வருவதாகவும் இது ஆங்கலோ செக்ஷன் சூழச்சி எனவும் இறுதி வரை இதற்கு எதிராக போராட்ட போவதாக ஜெனிவாவுக்கான இலங்கை நிரந்தர பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவுக்கான அமெரிக்க தூதுவர் ஐலின் டொனஹோ, குணநாயகத்தை தொடர்புக்கொண்டு, யோசனைக்கு இணங்குமாறு அழுத்தம் கொடுத்ததாகவும் குணநாயகம் அதனை நிராகரித்ததாகவும் கூறியுள்ளார்.

சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பாக பாரதூரமான குற்றச்சாட்டுகள் குறித்து கூடிய கவனம் செலுத்தப்படாமை, வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தினரை அகற்றுதல், மாகாணங்களை அடிப்படையாக கொண்டு அதிகாரங்களை பரவலாக்கி அரசியல் தீர்வொன்றை வழங்குதல், சட்டத்தின் நிர்வாகத்தை ஏற்படுத்துதல், கருத்துச் சுதந்திரத்தை பாதுகாத்தல் போன்ற விடயங்கள் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக தொழிற்நுட்ப உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆணையாளரை வலியுறுத்தல் உள்ளிட்ட விடயங்கள், அமெரிக்காவின் இந்த யோசனையில் அடங்கியுள்ளன.

No comments:

Post a Comment