Tuesday, March 20, 2012ராமநாதபுரம்::வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக, பலரிடம் மோசடி செய்த ஏஜன்ட்கள் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரை சேர்ந்தவர், சீனிவாசன். இவரிடம், ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சேர்ந்த அலி அக்பர், வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறினார்.
இதை நம்பிய சீனிவாசன், இலங்கைக்கு சமையல் வேலைக்கு அனுப்புவதற்காக, தலா 30 ஆயிரம் ரூபாய் வீதம், மூன்று பேரிடம், 90 ஆயிரம் ரூபாயை வாங்கி, அலி அக்பரிடம் கொடுத்தார். ஓராண்டிற்கு மேலாகியும், மூவரையும் இலங்கைக்கு அனுப்பவில்லை. சீனிவாசன், ராமநாதபுரம் எஸ்.பி., காளிராஜ் மகேஷ்குமாரிடம், புகார் கொடுத்தார்.
இதேபோல் சாயல்குடி பாக்கியம் என்பவரிடம், கீரந்தையை சேர்ந்த செல்லபாண்டி, ஆப்கானிஸ்தானில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை, இரண்டு ஆண்டுகளுக்கு முன் வாங்கி ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து பாக்கியம், போலீசில் புகார் கொடுத்தார்.
விசாரித்ததில், செல்லபாண்டி சாயல்குடி பகுதியில், வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி, பலரிடம் பல லட்ச ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இது போன்று ஏமாற்றும் ஏஜன்ட்களை கைது செய்ய எஸ்.பி., உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment