Tuesday, March 20, 2012

உள்நாட்டு அமெரிக்கர்கள் என்னை கொலை செய்ய முயற்சிக்கின்றனர் – விமல் வீரவன்ச!

Tuesday, March 20, 2012
இலங்கை::உள்நாட்டு அமெரிக்கர்கள் தம்மை கொலை செய்ய முயற்சிப்பதாக வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அமெரிக்க உற்பத்திகளை நிராகரிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதனால் அதற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் அந்நாட்டு உற்பத்திகளை நிராகரிக்குமாறு தாம் கோரியதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், ஆச்சரியப்படும் வகையில் உள்நாட்டு அமெரிக்கர்கள் இந்தக் கோரிக்கையினால் கடும் ஆத்திரமடைந்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் பல ஊடகவியலாளர்கள் இந்த கோரிக்கையினால் பதற்றமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பெருமளவிலான அமெரிக்க புதல்வர்களும், புதல்விகளும் வாழ்ந்து வருவது ஆச்சரியமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா கென்யாவிற்கு மட்டுமன்றி இலங்கைக்கும் விஜயம் செய்துள்ளார் என்றே கருதத் தோன்றுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தம்மைக் கொலை செய்தாலும் அதனையிட்டு வருத்தப்பட போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க உற்பத்திகளை பயன்படுத்த வேண்டாம் என்பதே தமது கோரிக்கை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என தாம் கோரியதனைப் போன்று சில ஊடகங்கள் பதற்றமடைந்து, தகவல்களை திரிபுபடுத்தி வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பொருட்களை நிராகரிக்குமாறு விடுத்த கோரிக்கையினால் சிலர் ஏன் இவ்வளவு பதற்றமடைந்துள்ளார்கள் என்பது தமக்குப் புரியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு அழுத்தங்களுக்கு எதிராக எதிர்ப்பை வெளியிடும் உரிமை நாட்டு மக்களுக்கு காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை நேசிப்போர் வாழ்கின்றார்கள் என்பதனை தெளிவுபடுத்தும் நோக்கில் தாம் இந்தக் கோரிக்கையை விடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment