Monday, March 26, 2012இலங்கை::இலங்கை மக்கள் மத்தியில் இந்தியா, அமெரிக்காவுக்கு எதிரான மனநிலையை உருவாக்கி சீனாவுடன் நட்புறவை வலுப்படுத்தி இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர். குணதாச அமர சேகர அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறுகிறார்.
ஐ.நா.வின் நவ நீதம் பிள்ளை இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்வதை கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக டாக்டர். குணதாச அமரசேகர மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் இரண்டு படகுகளில் காலை வைத்துக்கொண்டு கொள்கைகளை முன்னெடுத்தமையே இன்றைய நிலைக்கு காரணமாகும்.
எனவே இந்த நிலையிலிருந்து மீண்டும் புதிய கொள்கைகளை நிரந்தரமானதாக வகுக்க வேண்டும். அமெரிக்காவும், இந்தியாவும் எமக்கு துரோகமிழைத்து விட்டன. எனவே எமக்கு புதியதொரு வல்லரசின் பாதுகாப்பு அரவணைப்பு தேவை.
இதனால் அமெரிக்கா இந்தியாவுடனான தொடர்புகளை கைவிட்டு சீனாவுடனான உறவை வலுப்படுத்தி அந்நாட்டுக்கு எமது நாட்டுக்குள் இராணுவம் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சுதந்திரமாக இடமளிக்கப்பட வேண்டும்.
இதற்காக அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் எதிராக எமது மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும். அதன்போதே எமது முயற்சி முழுமையாக பலனளிக்கும்.
எமது நண்பனாக சீனாவை அரவணைத்துக்கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது.
நவநீதம்பிள்ளை
இலங்கைக்கு விஜயம் செய்வதை கடுமையாக எதிர்க்கின்றோம். அரசாங்கம் இது தொடர்பில் மிதமான போக்கை கடைப்பிடிக்காது கடுமையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment