Saturday, March 03, 2012இலங்கை::தனது பிள்ளைகள் இருவருக்கு நஞ்சூட்டிய தந்தை ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் (2.3.2012)உத்தரவிட்டுள்ளது.
திகன அலுவத்தை பகுதியைச் சேர்ந்த 31 வயதான ஒருவரையே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த நபர் ஐந்து வயதான தனது மகனுக்கும், 11 வயதான மகளுக்கும் நஞ்சூட்டியுள்ளதுடன், அவர்கள் தற்போது பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபரின் மனைவியும் ஆறு மாதங்களுக்கு முன்னதாக அரலி விதையை உண்டு உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து சந்தேகநபரை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் ரொஹான் ஜயவர்த்தன உத்தரவு பிறப்பித்தார்
No comments:
Post a Comment