Thursday, March 22, 2012

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மாநாட்டுக்கு அமெரிக்கா சமர்ப்பித்திருக்கும் பிரேரணையை இலங்கை நம்பிக்கையோடு முகம் கொடுக்கும்-மொஹான் பீரிஸ்!

Thursday, March 22, 2012
இலங்கை::ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மாநாட்டுக்கு அமெரிக்கா சமர்ப்பித்திருக்கும் பிரேரணையை இலங்கை நம்பிக்கையோடு முகம் கொடு ப்பதாக முன்னாள் சட்டமா அதிபரும் ஜெனீவா சென்றுள்ள இலங்கை தூதுக்குழுவின் முக்கியஸ்தருமான சட்டத்தரணி மொஹான் பீரிஸ் தெரிவித்திருக்கின்றார்.

உண்மையில் இலங்கையானது உலகில் எந்தவொரு நாட்டுக்கும் எதி ராக செயற்பட்ட தேசம் அல்ல. அதே நேரம் அணி சேரா கொள் கையில் உறுதியாக இருக்கும் நாடும் கூட. அதனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் இலங்கையின் குரலுக்கு செவி சாய்க்குமென உறுதிபடக் கூற லாம்.

இலங்கையானது புலிப் பயங்கரவாதத்தினால் சின்னாபின்னமாக்கப்ப ட்ட ஒரு நாடு. புலி பயங்கரவாதத்தின் செயற்பாடுகளால் இந் நாட்டின் அபிவிருத்தி பல தசாப்தங்களுக்கு பின்னடைந்து இரு க்கின்றது.

இந்த பயங்கரவாதம் காரணமாக இந்நாட்டில் வாழ்கின்ற எல்லா மக் களுமே பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். புலிகளால் பாதிக்கப்படாத எந்தவொரு இனமும் இந்நாட்டில் இல்லை. இப்பயங்கரவாதம் காரணமாக இந்நாட்டு மக்கள் சொல்லொணா துன்ப, துயரங்களை அனுபவித்தார்கள். மனித உரிமை மீறல்களும், மனித படு கொலைகளும், சொத்து அழிப்புகளும் தான் புலிப் பயங்கரவாத த்தின் அடிப்படையாக இருந்தது.

புலிப் பயங்கரவாதம் ஆயிரக்கணக்கானோரை பலியெடுத்திருக்கி றது. இன்னும் பல ஆயிரக்கணக்கானோரை உடல், உள ரீதியாக ஊனப்படுத்தியுள்ளது. இனங்களுக்கிடையே சந்தேகங்களும், அவ நம்பிக்கைகளும் கற்பிக்கக்கூடிய வகையில் திட்டமிட்டு செய ற்பட்டது புலிப் பயங்கரவாதம்.

புலிப் பயங்கரவாதத்தின் இக்கோரச் செயல்கள் ஓரிரு வருடங்கள் அல்ல. சுமார் 30 வருடங்கள் இந்நாட்டில் தலைவிரித்தாடியது. நாளை மீது நம்பிக்கை வைக்க முடியாதவர்களாக, சீவிக்க வேண் டிய நிலைக்கு மக்கள் உள்ளாக்கப்பட்டனர். வடக்கு, கிழக்கு உட் பட முழு நாட்டு மக்களுமே அச்சம், பீதியுடன் வாழ வேண்டிய நிலையையே புலிப் பயங்கரவாதம் உருவாக்கியிருந்தது. இதனால் நாட்டு மக்களின் சுதந்திர நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டிருந் தது.

இவ்வாறான நிலையில் தான் நாட்டு மக்களின் அபிலாசைகளுக்கும், எதிர்பார்ப்புக்கும் ஏற்ற வகையில் 2009ஆண்டு மே மாதம் 18ம் திகதி புலிப் பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டது. இத ற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தூர நோக்கு மிக்க தலைமைத்துவத்தை வழங்கினார்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதோடு நாட்டில் 30 வருடங்கள் நீடித்த அச்சம், பீதி முழுமையாக நீங்கியது. எங்கும் எந்நேரத்திலும் சுத ந்திரமாக நடமாடக்கூடிய சூழல் உருவானது. நாட்டில் அமைதி, சமாதானம் ஏற்பட்டது. இனங்களுக்கிடையே இன ஐக்கியமும், புரிந்துணர்வும் தழைத்தோங்க ஆரம்பித்தது. முழு நாட்டு மக்க ளும் நம்பிக்கையோடு நிம்மதி பெருமூச்சு விட தொடங்கினர்.

அதே நேரம் முழு நாட்டையும் துரிதமாக அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்களை ஜனாதிபதி தலைமையில் அரசாங்கம் விரிவான அடிப்படையில் முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கியிருந்த வடக்கு, கிழக்கு பிர தேசம் முன்னுரிமை அடிப்படையில் மேம்படுத்தப்படுகின்றது. அப் பிரதேச மேம்பாட்டுக்கு மாத்திரம் கடந்த இரண்டரை வருட காலப்பகுதியில் 310 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிட்டி ருக்கின்றது.

அதேநேரம் மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக்கட்டத்தின் போது சரணடைந்த புலிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புனர் வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். அவர் கள் கல்வியைத் தொடரவும், தொழில்வாய்ப்புகளில் ஈடுபடவும் அர சாங்கம் பலவிதமான வசதி வாய்ப்புகளை செய்து கொடுத்துள்ளது.

அதே நேரம் இடம்பெயர்ந்த மக்களில் பெரும்பகுதியினர் சொந்த இட ங்களிலேயே மீளக்குடியமர்த்தப்பட்டு விட்டனர். அரசாங்கம் சகல வேலைத்திட்டங்களையும் திறந்த அடிப்படையிலேயே மேற் கொள்கின்றது. எதிலும் ஒளிவு மறைவு கிடையாது. இவ்வாறான நிலையில் அமெரிக்கா இந்தப் பிரேரணையை கொண்டு வந்திரு க்கிறது. என்றாலும் அப்பிரேரணைக்கு எதிராக இலங்கையின் வெளிப்பாட்டுத் தன்மையை உலக நாடுகளுக்கு எடுத்துக் கூறுவதற்கு இலங்கைக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அந்த சந்தர்ப்பத்தை மனித உரிமைகள் தொடர்பான விசேட தூது வரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தலைமையிலான இல ங்கையின் தூதுக் குழுவினர் உச்ச அளவில் பயன்படுத்தி வரு கின்றனர். இதனை அமைச்சரின் கூற்றுகளும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இலங்கையின் அபிவிருத்தி வேலைத் திட் டங்களையும், வெளிப்பாட்டுத் தன்மையையும் சர்வதேசமயப்படு த்துவதற்கும் இந்தப் பிரேரணை வழி வகுத்து இருக்கின்றது. அத னால் இப்பிரேரணையை எம்மால் நம்பிக்கையோடு எதிர்கொ ள்ள முடியும்.

No comments:

Post a Comment