Thursday, March 22, 2012

கே பியின் கோரிக்கை: பிரபாகரன் நிராகரிப்பு-பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ!

Thursday, March 22, 2012
இலங்கை::இறுதி கட்ட யுத்ததின் போது சரணடையுமாறு கே பீ எனப்படும் குமரன் பத்மநாதனின் கோரிக்கையை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நிராகரித்தாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இலங்கைக்கு எதிரான யோசனை ஒன்றை ஏன் கொண்டு வந்தீர்கள் என அமெரிக்க உயர்ஸ்தானிகரகத்திடம் வினவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யுத்ததின் பின்னர் தமிழ் மக்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள விடயங்களில் தெளிவுத்தன்மை இல்லாததன் காரணமாகவே இந்த யோசனையை முன்வைத்துள்ளதாக அந்த உயர்ஸ்தானிகரகம் தெரிவித்தாக பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் தெற்காசிய நாடுகளுக்கான உதவி ராஜாங்க செயலாளரான ரொபட் ஒ பிளேக்கிடம் தாம் வினவியதாகவும் அதற்கு அவர் எந்தவித பதில்களை வழங்கவில்லை எனவும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment