Wednesday, March 21, 2012

அரச படைகளுக்கும் புலிகளுக்கும் இடையிலான இறுதி யுத்தத்தின் போது தீவிரமாக செயற்பட்ட படைவீரர்: இராணுவ நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு!

Wednesday,March,21,2012
இலங்கை::அரச படைகளுக்கும் புலிகளுக்கும் இடையிலான இறுதி யுத்தத்தின் போது தீவிரமாக செயற்பட்ட படைவீரர்: இராணுவ நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு:-

அரச படைகளுக்கும் புலிகளுக்கும் இடையிலான இறுதி யுத்தத்தின் போது முகமாலை, புதுக்குடியிருப்பு பகுதிகளில் தீவிரமாக செயற்பட்ட ஓர் இராணுவ ஆணை அதிகாரி, இராணுவ நீதிமன்றத்தின் எதேச்சதிகாரமான தீர்ப்பின் மூலம் தான் பதவியிறக்கப்பட்டு சேவையிலிருந்து நீக்கப்படவுள்ளதாக மேல்முறையீட்டு நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட ஆணை அதிகாரியான பி.டபிள்யூ.ஏ. பெர்னாண்டோவின் ஆணைக்கோரும் மனு நேற்று செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு நீதிமன்றின் பிரதம நீதிபதி எஸ்.ஸ்ரீகந்தராசா அடங்கிய நீதிபதி குழுமத்தினால் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்த மனுவில் இராணுவ தளபதி உட்பட பல இராணுவ உயர் அதிகாரிகளும் சட்டமா அதிபரும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இராணுவ வீரர்களுக்கென அநுராதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட இப்பலோகம ரணஜயபுர வீடமைப்பு திட்டத்தில் தனக்கு ஒரு வீடு வழங்கப்பட்டதாக அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் பிள்ளைகளுக்கென அமைக்கப்பட்ட பாடசாலையில் தனது பிள்ளைகளும் படித்ததால் அங்கு காணப்பட்ட சில குறைப்பாடுகள் தொடர்பில் தான் அக்கறை கொண்டிருந்ததாக அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமாக இந்த பிள்ளைகள் குடிநீர் வசிதியின்றி கஷ்டப்படுவதாக அவர் கூறியிருந்தார். பிரிகேடியர் தென்னக்கோனுடன் 28.06.2010 இல் வீட்டு உரிமையாளர்களுக்கு மீள்கொடுப்பனவு திட்டம் பற்றி விளக்கும் கூட்டம் ஒன்றை நடத்தினார். கூட்ட முடிவில் கேள்விகள் இருப்பின் கேட்கலாம் என பிரிகேடியர் கூறியதை தொடர்ந்து தான் பாடசாலையின் சில குறைபாடுகளை எடுத்துக் கூறியதாகவும் அதனை கூட்டத்தில் பங்குப்பற்றிய சகலரும் பாரட்டியதாகவும் மன்றில் கூறியுள்ளார்.

தான் கூட்டத்தைவிட்டு வந்த பின் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டியதாகவும் கடற்படை, விமானப்படை வீரர்கள் கூட்டத்தை குழப்பியதாகவுத் தான் அறிந்ததாக அவர் மனுவில் கூறியுள்ளார்.

கடற்படை வீரர்; ஒருவரை அதிகாரிகள் கைது செய்ததாகவும் இதனை தொடர்ந்து கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டதாகவும் தனக்கு இந்த குழப்பத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென்றும் அவர் மனுவில் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் காரணமாக தன்னையும் குடும்பத்தையும் 24 மணித்தியாலத்துக்குள் வீட்டை விட்டு வெளியேறும்படி இராணுவ தளபதி பணித்ததாகவும் தொடர்ந்து இராணுவ தளபதி தனக்கு எதிராக ஒரு இராணுவ நீதிமன்றை அமைத்தாகவும் மனுதாரர் கூறியுள்ளார்.

தான் 20 வருடங்களாக இராணுவத்தில் சேவையாற்றியதாகவும் பிரதிவாதிகளான இராணுவ அதிகாரிகள் எதேச்சதிகாரமாக சட்டத்துக்கு முரணாக தீயநோக்குடன் தனது உரிமைகளை அங்கீகரிக்க தவறியதுடன் தமது கடமைகளை செவ்வனே ஆற்ற தவறியுள்ளனர் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment