Wednesday, March 21, 2012

இலங்கை தொடர்பில் இந்தியாவின் முடிவையொட்டி கவலை தெரிவித்து பிக்குகள் பேரணி!

Wednesday,March,21,2012
இலங்கை::இலங்கை தொடர்பில் இந்தியாவின் முடிவையொட்டி கவலை தெரிவித்து பிக்குகள் பேரணி:-

இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள பிரேரணைக்கு ஆதரவளிக்கப்படும் என இந்தியா அறிவித்தமைக்கு கவலை தெரிவித்து பிக்குகள் சிலர் இன்று கொழும்பில் பேரணி சென்றனர்.

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தை நோக்கி பேரணி சென்ற தேசிய பிக்கு சம்மேளனம் மனுவொன்றையும் கையளித்துள்ளது.

இன்று முற்பகல் மேற்கொள்ளப்பட்ட இந்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பிக்குகள் கலந்து கொண்டனர்.

இந்திய அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு ஹாதிக ஹெல உறுமய, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட பல தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில் முடிவை மீள் பரிசீலனை செய்யுமாறு இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment