Sunday, March 25, 2012ஜெனீவா::ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் ஐக்கிய அமெரிக்கா இலங்கை தொடர்பில் முன்வைத்த பிரேரணை நிறைவேற்றப்பட்டமை ஒரு தவறான முன்னுதாரணம் என ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி தம்பரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலை, ஐக்கிய நாடுகள் சபையின் கோட்பாடுகளுக்கு சவாலானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த பிரேரணை மூலம் சில நாடுகள் தங்களுடைய அரசியல் தேவைகளுக்காக ஐநா மனித உரிமை கவுன்ஸிலை பிணை வழங்குனராக பயன்படுத்தியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இலங்கை தனது இறைமை, சுயாதீபத்தியம், கௌரவம் என்பவற்றை காப்பாற்ற போராடும் என தம்பரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment