Sunday, March 25, 2012புவனேஸ்வர்::ஒடிசா மாநிலம் காந்தமால் மற்றும் காஞ்சிம் மாவட்டங்களின் எல்லை பகுதியில், மலையேற்றப் பயிற்சியில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த பவ்லோ பாஸ்சுஸ்கோவும், கிளாடியா கோலன்ஜிலோவும் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் இருவரும், பூரி பகுதியில் இருந்து 14ம் தேதி அங்கு சென்றிருந்தனர். அப்போது அவர்களை, மாவோயிஸ்ட்கள் கடத்திச் சென்றனர். அவர்களை மீட்க, மாநில அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.
இந்நிலையில், நேற்றிரவு அவர்களை மாவோயிஸ்டுகள் விடுவித்து விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்டபாக, தங்களுக்கு வதந்திகள் வந்துள்ளதாகவும் அவர்களின் விடுதலை குறித்து இன்னும் எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
முன்னதாக, கடத்தப்பட்ட இத்தாலியர்களை விடுவிக்க பழங்குடி பகுதிகளில் சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிப்பது, மாவோயிஸ்ட்டுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுப்படுவதை நிறுத்துவது மற்றும் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட 13 கோரிக்கைகளை மாவோயிஸ்டுக்கள் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment