Saturday, March 24, 2012

இலங்கை வானொலிக் குயிலின் ஓசை நிரந்தரமாகவே நின்று போனது!

Saturday, March 24, 2012
இலங்கை::இலங்கையின் 'வானொலிக் குயில்' என அழைக்கப்பட்ட புலமை வாய்ந்த வானொலி அறிவிப்பாளர் ராஜேஷ்வரி சண்முகம் இயற்கை எய்தினார்.

தனது பேரப்பிள்ளைகளைப் பார்ப்பதற்காக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்று மீண்டும் கொழும்புக்கு புறப்பட்ட வேளை மாரடைப்பால் அவர் காலமானார்.

கொழும்பில் வாழ்ந்து யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று மாலை காலமான அவர் இறக்கும்போது 72 வயதை அடைந்திருந்தார்.

இன்று உலகமெங்கும் கொடிகட்டிப் பறக்கும் பல மூத்த மற்றும் இளைய அறிவிப்பாளர்களை உருவாக்கிய இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் தமிழ்ச் சேவையில் 35வருடங்களுக்கு மேலாக பணியாற்றியவர்.

1980களுக்கு முன்னரே அறிவிப்புத் துறையில் கால் பதித்த ராஜேஸ்வரி என்ற வானொலிக் குயில் அறிவிப்பாளராகவும், நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும், வானொலி நாடகங்களின் சிறந்த பாத்திரகர்த்தாவாகவும் தனது பல்துறை சார் திறமைகளை வெளிப்படுத்தியவர்

No comments:

Post a Comment