Saturday, March 24, 2012சென்னை::துபாய் விமானத்தின் கதவு மூடாமல் இருந்ததை, விமானி சரியான நேரத்தில் கண்டுபிடித்ததால் 262 பயணிகள் தப்பினர். சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமிரேட் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அதில் 262 பயணிகள் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கியபோது, விமானத்தின் கதவுகள் சரியாக மூடாமல் இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது. இதை விமானி கவனித்தார். உடனே விமானத்தை இயக்காமல் நிறுத்திவிட்டு, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். உடனே, விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்துக்குள் ஏறி சரிபார்த்தனர்.
பயணிகள் பகுதிக்கும், சரக்கு பகுதிக்கும் இடையில் உள்ள கதவு மூடப்படாமல் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, அந்த கதவை மூடி சரிசெய்தனர். பின்னர், ஒரு மணி நேரம் தாமதமாக 4.30 மணிக்கு விமானம் புறப்பட்டுச் சென்றது. கதவு மூடப்படாமல் இருப்பதை உடனடியாக விமானி கண்டுபிடித்து நிறுத்தினார். இல்லாவிட்டால், சரக்கு பகுதிக்குள் வெளிகாற்று உள்ளே வந்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தி இருக்கும். விமானியின் சாமர்த்தியத்தால் பயணிகள் தப்பினர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment