Thursday, March 01, 2012ஜெனீவா::ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்படும் பிரேரணையின் போது இலங்கைக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு சில ஆபிரிக்க நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கின்ற நாடுகளின் பிரதிநிதிகளுடன் இன்று முற்பகல் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது உறுதியளிக்கப்பட்டதாக மனித உரிமை பேரவையின் 19வது கூட்டத்தொடரில் கலந்துகொள்ளும் இலங்கை குழுவின் தலைவர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கைக்கு எதிரான பிரேரணை சமர்ப்பிக்கப்படுமாயின் மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவம் வகிக்கின்ற நாடுகளின் அதரவை இலங்கைக்கு பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment