Friday, March 23, 2012

கொழும்பிபிலுள்ள இரவு விடுதிக்குச் சென்று கட்டணம் செலுத்தத் தவறிய பிரித்தானிய பிரஜையை நாடுகடத்த உத்தரவு!

Friday, March 23, 2012
இலங்கை::கொழும்பிபிலுள்ள இரவு விடுதிகளுக்கு சென்றுவிட்டு கட்டணங்களை செலுத்தத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்ட பிரித்தானிய பிரஜையொருவரை நாடு கடத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெரல் ஜுலியன் எனும் இந்நபர், கொள்ளுபிட்டியிலுள்ள இரவு விடுதிகள் இரண்டிற்கு 114, 166 ரூபாய்களை செலுத்தத் தவறியதாகவும் அவரிடம் செல்லுபடியான விஸாவும் இல்லையென்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

இரவு விடுதியொன்றின் முகாமையாளர் ஒருவர், கொள்ளுபிட்டி பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டில், இவ்விடுதியை பயன்படுத்திய சந்தேக நபர் 44,166 ரூபா கட்டணத்தை செலுத்தாமல் அங்கிருந்து செல்ல முற்படடதாக தெரிவித்துள்ளார்.

கட்டணத்தை செலுத்துமாறு கோரியபோது தன்னிடம் பணம் இல்லை என இச்சந்தேக நபர் தெரிவித்தாராம். தனது வங்கிக் கணக்கினூடாக பணத்தை செலுத்துவதாக அவர் வாக்குறுதி அளித்த போதிலும், வங்கிக் கணக்கில் பணம் இருக்கவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டது. மற்றொரு விடுதியிலும் அவர் 70,000 ரூபா கட்டணத்தை செலுத்தத் தவறியுள்ளார்.

பொலிஸார் அவரை கைது செய்து விசாரித்தபோது அவரிடம் செல்லுபடியான விஸா இருக்கவில்லை என்பது தெரியவந்தது. இந்நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, இவரை நாடுகடத்துமாறு நீதவான் கனிஷ்க விஜேரட்ன உத்தரவிட்டார். நாடுகடத்தப்படும்வரை மீரிஹான தடுப்புமுகாமில் அவரை வைக்குமறும் நீதவான் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment