Tuesday, March 20, 2012

அமெரிக்காவின் பிரேரணையை ஏற்றுக்கொள்ளத் தயார் நிலையில் மனித உரிமைகள் பேரவை!

Tuesday, March 20, 2012
அமெரிக்காவினால் இலங்கை தொடர்பில் இந்த வாரத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஏற்றுக்கொள்ளத் தயார் நிலையில் உள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்கத் தூதுவர் எலீன் டொனஹியூ தெரிவித்துள்ளார்.

WALL STREET ஊடகத்திற்கு அளித்த நேர்காணலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அடையாள வாக்கெடுப்பாக கருதாது அர்த்தமுள்ள முயற்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்திற்கு ஊக்கமளிப்பதற்கான காத்திரமான நடவடிக்கையாகவே இந்த நகர்வைக் கருதுவதாக டொனஹியூ குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இலங்கை அரசாங்கம் தோல்வி அடையலாம் என்ற அச்சம் நிலவுவதாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்கத் தூதுவர் கூறியுள்ளார்.

இதேவேளை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட ஒருசில பரிந்துரைகள் வரவேற்கத்தக்கவை என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் ரொபர்ட் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.

நடைமுறை சாத்தியமான திட்டமொன்றை மேற்கொள்வதற்கு போதிய கால அவகாசம் இருந்த போதிலும், இலங்கை அதனை முன்னெடுக்கத் தவறியுள்ளமை கவலையளிப்பதாக WALL STREET ஊடகத்திற்கு அளித்த நேர்காணலின் போது ரொபர்ட் பிளேக் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment