Saturday, March 03, 2012வாஷிங்டன்::கூடங்குளம் விவகாரத்தில், சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் இருந்து நிதியுதவி வருவதாக சமீபத்தில் பிரதமர் மன்மோகன்சிங் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிறுவனங்கள் தான் போராட்டத்தைத் தூண்டி விடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், கூடங்குளம் விவகாரத்தில், 77 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை மத்திய அரசு தனது கண்காணிப்பில் வைத்துள்ளது. இது குறித்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலண்ட் நேற்று கூறியதாவது: இந்தியாவின் ஆக்கப்பூர்வ அணுசக்தித் திட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது. அதற்காக அங்கு எதிர்த்துபோரிடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை ஆதரிக்கிறோம் என்று அர்த்தமல்ல. இந்தியாவில், வளர்ச்சி மற்றும் ஜனநாயகத்தை ஊக்குவிக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அமெரிக்கா ஆதரவளிக்கிறது.
சயின்ஸ்' பத்திரிகைக்கு பிரதமர் மன்மோகன் சிங் அளித்த பேட்டி பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. அமெரிக்காவில் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அணுசக்தி திட்டங்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. மின்சக்தியை அதிகரிக்க வேண்டிய தேவையை இந்த நிறுவனங்கள் கணக்கிலேயே எடுத்துக் கொண்டு கருத்து தெரிவிப்பதில்லை. இவ்வாறு நுலண்ட் தெரிவித்தார்.
No comments:
Post a Comment