Monday, March 26, 2012

சண்டிகர் யாருக்கு சொந்தம்? பஞ்சாப், அரியானா மோதல்!

Monday, March 26, 2012
ரோதக்::சண்டிகர் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக பஞ்சாப் மற்றும் அரியானா மாநில முதல்வர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த 1966ம் ஆண்டு பஞ்சாபிலிருந்து அரியானா தனிமாநிலமாக பிரிக்கப்பட்டது. சண்டிகர் நகருக்கு இரு மாநிலங்களும் சொந்தம் கொண்டாடியதை தொடர்ந்து அது யூனியன்பிரதேசமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு கீழே கொண்டுவரப்பட்டது. இரண்டு மாநிலங்களுக்கும் அது தலைநகராக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் பஞ்சாப் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பானது. புதிய அரசின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரையுடன் அவை தொடங்கியது. இதில் சண்டிகர் நகர் பஞ்சாப் மாநிலத்துக்கு சொந்தம் என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. இதற்கு அரியானா முதல்வர் புபீந்தர் சிங் ஹூடா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரோதக் நகரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஹூடா, 'சண்டிகர்' அரியானா மாநிலத்தின் ஒரு பகுதியாகும். அரியானாவின் தலைநகராக தொடர்ந்து செயல்படும். சண்டிகர் மீது பஞ்சாப் அரசுக்கு எந்த அளவு உரிமை உள்ளதோ அதே அளவு உரிமை அரியானாவுக்கும் உள்ளது. இதை எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டோம்' என்றார்.

No comments:

Post a Comment