Friday, March 23, 2012

எதிர்கட்சியினர் குறித்து கவலை – ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Friday, March 23, 2012
இலங்கை::ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க சமர்பித்திருந்த பிரேரணை தொடர்பான கலந்துரையாடல்கள் இடம் பெற்ற போது எதிர்கட்சி வடக்கிற்கு சென்று கருத்துக்களை வெளியிட்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பண்டாரகம பிரதேசத்தில் இன்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் பிரேரணையை தோற்கடிப்பதற்காக நாட்டு மக்கள் ஒன்றிணைந்திருந்த போது எதிர்கட்சி இவ்வாறு செயற்பட்டமையானது கவலையளிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு தாம் நன்றிகளை தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment